மொத்தமாக குவிந்த கூட்டம்.. தமிழகத்தில் கொரோனா ஸ்பைக் வருமா Print News
Published On May 24, 2021 03:57 PM
சென்னை: தமிழகத்தில் இன்று முதல் காலவரையற்ற ஊரடங்கு அமலுக்கு வந்துள்ள நிலையில், நேற்றும், நேற்று முன்தினமும் கடைகளில் கூட்டம் அலைமோதியதை, பார்த்து இருப்பீர்கள்.
சென்னையில் சரிகிறது
அதேநேரம், இதில் ஒரு நல்ல செய்தி இருக்கிறது. அது என்னவென்றால் , கொரோனா முதலாவது அலையாக இருக்கட்டும், இரண்டாவது அலையாக இருக்கட்டும், கீழே இருந்து அலை மேலே ஏறும்போது, மிகவும் ஆபத்தானது. அது உச்சத்தில் இருக்கும்போதும் மோசமானது. ஆனால், சென்னையை பொறுத்த அளவில் தற்போது அந்த அலை கீழே சரிய தொடங்கியுள்ளது. தட்டையாக்க வேண்டும் என்பார்களே, அந்த கிராப் கீழ்நோக்கி சரியத் தொடங்கியுள்ளது.